மதுபானம், புகையிலை மற்றும் சட்ட விரோதமான போதைப்பொருள் பாவனையை படிப்படியாக குறைத்து அவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதகங்களைக் குறைப்பதன் ஊடாக எல்லா இலங்கையர்களினதும் சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதும் உற்பத்தி வினைத்திறனை அதிகரிப்பதும் வறுமையை ஒழிப்பதற்காக செயல்திறமாக பணியாற்றுவதும் ஆகும்.

நோக்கங்கள்

2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டாகும்போது இலங்கையில் சட்ட விரோத போதைப்பொருள் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விற்பனையை குறைந்தபட்சம் 80%த்தால் குறைத்தல்.
2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டாகும்போது தனிநபர் மதுபான பாவனையை குறைந்தபட்சம் 25%த்தால் குறைத்தல்.
2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டாகும்போது புகையிலை உற்பத்தி, பாவனையை குறைந்தபட்சம் 50%த்தால் குறைத்தல்.
புதியவர்கள் மதுபானம் பயன்படுத்த ஆரம்பிப்பதை தடுத்தல்.
தற்போது போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் பிறழ்வான நடத்தைகளை குறைத்தல்.
2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டாகும்போது மதுபான பாவனையினால் ஏற்படும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 50%த்தால் குறைத்தல்.
புகையிலை, மதுபானம் தொடர்பான நேரடியான, மறைமுகமான விளம்பரங்களையும் அந்நிறுவனங்களின் சமூக சேவை நிகழ்ச்சித் திட்டங்களையும் முழுமையாக நிறுத்துதல்.
வீடுகளில், தொழில் நிலையங்களில், பொது இடங்களில் வேறு நபர்களால் மதுபானம் பயன்படுத்தும் காரணத்தினால் மதுபானம் பயன்படுத்தாதவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதகங்களை குறைத்தலும் அத்தகைய பிரச்சினைகள் இல்லாத ஒரு சூழலில் வாழ்வதற்கு அதனைப் பயன்படுத்தாதவர்களுக்கு உள்ள உரிமையை உறுதி செய்தலும்.
மதுபான பாவனையை ஆரம்பிப்பதற்கு அல்லது தங்களது பாவனையை அதிகரிப்பதற்கு அல்லது தனிப்பட்டவர்களுக்கு அழுத்தங்கள் இல்லாத சமூக சூழலை உருவாக்குதல்.
புகையிலை பயன்படுத்தாதவர்களினால் தன்னார்வமின்றி புகையிலை புகையை சுவாசிக்கும் நிலைமையைக் குறைத்தலும் புகையிலை புகையினால் பாதிக்கப்படாத ஒரு சூழலில் வாழ்வதற்கு புகையிலை பயன்படுத்தாதவர்களுக்கு உள்ள உரிமையை உறுதி செய்தலும்.
மதுபான பாவனையினால் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படும் அழுத்தங்களின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதை குறைத்தல்.
புகையிலை, மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருளின் இருப்பைக் குறைத்தல்.
மதுபான பாவனையினால் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படும் பாதகங்கள் தொடர்பில் சரியாகவும் முறையாகவும் மக்களுக்கு அறிவூட்டுதல்.

செயற்திட்டங்கள்
“போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாடு” நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது போதைப்பொருள் கேள்வியை குறைப்பதுடன் வழங்களையும் குறைப்பது தொடர்பாக கவனம் செலுத்தி, பின்வரும் மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

1. கொள்கை மற்றும் சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்
2. சிகிச்சையும் புனர்வாழ்வும்
3. நிவாரணம்

ஜனாதிபதி போதை ஒழிப்புப் பிரிவு

கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து “போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாடு” நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பிரதான பொறுப்பாகும்.