தேசிய உணவூ உற்பத்தி போதைப்பொருள் தடுப்பு என்பவற்றைப் போன்று சூழலைப் பாதுகாப்பதற்காகவூம் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத் திட்டத்தினை முன்னாள் இந்திய ஜனாதிபதி பெரிதும் பாராட்டினார்.தேசிய உணவு உற்பத்தியினை மேம்படுத்துதல் போதைப்பொருட்களை தடுத்தல் என்பவற்றௌடு சூழலை பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்றைய அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெரிதும் பாராட்டினார் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அவர்களை மிகவூம் நட்புறவூடன் வரேவேற்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிரேஷ்ட தலைவர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தமை தமக்கு பெருமகிழ்சி அளிக்கிறது என தெரிவித்ததோடு இரு நாடுகளுக்குமிடையில் பல துறைகளில் நீண்டகாலமாக நிலவிவருகின்ற நட்புறவைப் பற்றியூம் நினைவூ கூர்ந்தார். இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அத்துடன் இலங்கையின் எழுத்தறிவூ மற்றும் சுற்றுலாத்துறையின் வெற்றி என்பவை தொடர்பில் அப்துல் கலாம் அவர்கள் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். தற்பொழுது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்கள் பழங்கள் மருந்துவகைகள் போன்றவற்றை எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் நமது நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் நமது நாட்டில் எண்ணை மற்றும் எரிவாயூ வழங்களிலிருந்து ஆகக்கூடிய அளவில் பயனைப்பெற்று எண்ணை மற்றும் எரிவாயூவில் தன்னிறைவு அடைய எதிர்பார்பதாகவூம் தெரிவித்தார். நீர் காடுகள் உள்ளிட்ட சுழலைப் பாதுகாப்பதற்கு எதிர்வரும் ஆண்டுகளில் அதிக கவனம் செலுத்துவதாகவூம் போதைப்பொருள் தொலையிலிருந்து சமூகத்தை விடுவித்துக் கொள்வதற்கு தேசிய வேலைத்திடம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாகவூம் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இவ்விடயங்கள் தொடர்பாக பெரிதும் பாராட்டிய முன்னாள் இந்திய ஜனாதிபதி அவர்கள் இந்நிலமைகள் இலங்கைக்கு மாத்திரமல்ல இப்பிராந்தியத்திற்கே முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார். இந்திய இலங்கை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நட்புறவூ தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களுக்கும் முன்னாள் இந்திய ஜனாதிபதி அவர்களுக்குமிடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன்போது கலாநிதி அப்துல்கலாம் அவர்களால் எழுதப்பட்ட இரண்டு நூல்கள் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி அவர்களால் அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது. அமைச்சர் பாட்டலி சம்பிக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிம்ஹா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நாட்டுக்கு போதைப் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் பாரிய பொறுப்பு கடற்படைக்கு ஒப்படைக்கப்படுகின்றது – ஜனாதிபதிதேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை நிறைவேற்றுகின்ற அதேவேளையில் சமூகத்திற்கு பாரிய துன்பமாக இருக்கின்ற போதைப்பொருள் தொல்லையிலிருந்து சமூகத்தினை பாதுகாப்பதற்கான பாரிய பொறுப்பு கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார். இந்நாட்டுக்குள் போதைப்பொருட்கள் பெருகிவருவதை தடுப்பதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டத்தை விட விரிவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்துவதற்கு கடற்படை தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். திருகோணமலை கடற்படை முகாமில் புதிய சமுத்திர விஞ்ஞானபீட கட்டட தொகுதியை அங்குரார்ப்பணம் செய்யூம் நிகழ்வில் நேற்று (28) முற்பகல் கலந்துகொண்டபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பல்வேறு கடத்தல்காரர்களிடமிருந்து கரையோர பிரதேசங்களை பாதுகாப்பது இன்று பெரும் சிக்கலாக மாறியிருக்கினறது என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பவை பொதுமக்களுடைய பங்கேற்புடன் கடத்தல்காரர்களிடமிருந்து கரையோர பிரதேசத்தை பாதுகாத்து கொள்வதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த வேண்டுமென தெரிவித்தார். எவ்வித வேற்றுமையூம் இன்றி அந்தஸ்து பாராமல் அனைவருக்கும் சட்டத்தை ஒரே விதமாக செயற்படுத்துகின்ற அரசு என்ற விதத்தில் தவறாளிகளுக்கு தண்டனை அளிப்பதற்கும் அரசு எந்தவிதத்திலும் தயங்காமல் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் 20 மற்றும் 22 வருட சேவைக்காலத்தை நிறைவூசெய்து 40இ 45 போன்ற வயதில் தமது வாழ்க்கையில் பெற்ற அறிவூ புலமை மற்றும் அனுபவம் என்பவற்றை பயனுறுதி மக்கவகையில் நாட்டுக்கு வழங்கக்கூடிய விதத்தில் கடற்படையில் இருந்து விலகிச் செல்லும் உத்தியோகத்தர்கள் தமது விருப்பத்தின் பேரில் அரச சேவையில் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வேலைத்திட்டம் ஒன்றையூம் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் திருகோணமலை கடற்படை முகாமுக்கு விஜயம் மேற்கொண்ட கட்படைத் தளபதி அவர்களை ரியல் அட்மிரல் ஜயந்த பெரேரா வரவேற்று அழைத்துச் சென்றார். இதன்போது பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யூ.டி பஸ்நாயக்க அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். ஜனாதிபதி அவர்களின் விஜயத்தை குறிக்கும் விதமாக முதலில் முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்று நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. அதன்பின்னர் ஜனாதிபதி அவர்களுக்காக இலங்கை கடற்படையின் விசேட அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய சமுத்திர விஞ்ஞான பீட கட்டட தொகுதியை அங்குரார்ப்பணம் செய்த ஜனாதிபதி அவர்கள் கட்டடத் தொகுதியை பார்வையிட்டார். இக்கட்டடம் அனைத்து பயிற்சி வசதிகளைக் கொண்ட 10 கட்டடங்களைக் கொண்ட விஞ்ஞான பீட வளாகத்தின் முதற் கட்டமாகும். இதன்போது கடெட் பயிற்சிக்காக திருகோணமலை கடற்படை முகாமுக்கு வருகைதந்த மாணவ மாணவிகளை சந்தித்த ஜனாதிபதி அவர்ளுடன் அளவளவினார். அதன்பின்னர் கடற்படை முகாமின் இற்ங்குதுறைக்கு சென்ற ஜனாதிபதி புதுப்பிக்கப்பட்ட கப்பலொன்றை வெள்ளோட்டம் விடும் நிகழ்விலும் கலந்துகொண்டார். இன்று முற்பகல் சுமார் 4 மணித்தியாலங்களை திருகோணமலை கடற்படை முகாமில் களித்த ஜனாதிபதி அவர்கள் தமது உத்தியோகபூர்வ கடமைகளின் பின்னர் பொழுதுபோக்காக கடற்படை இசைக் குழுவினருடன் இணைந்து பாடல்களைப்பாடி மாலைப்பொழுதை இனிமையாக களித்தார்.

உள்நாட்டு உணவு உற்பத்தி, போதைப்பொருள் தடுப்பு போன்று சூழல் பாதுகாப்புக்காக விரிவான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவேன். – ஜனாதிபதிஉள்நாட்டு உணவு உற்பத்தி, போதைப்பொருள் தடுப்பு போன்று சூழல் பாதுகாப்புக்காக விரிவான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி தெரிவித்தார். இந்த மூன்று விடயங்களும் இன்று நாட்டில் முக்கிய பிரச்சினையாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதற்கு தீர்வு வழங்குவதற்கு தமது அரசு முக்கிய பொறுப்பாகக் கருதி நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்குரிய அடிப்படை திட்டங்களை ஜனாதிபதி அலுவலகத்தின் இணைப்பாக்கத்துடனும் குறித்த நிறுவனங்களின் பங்களிப்புடனும் தற்பொழுது தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார். சூழல் மற்றும் மிருக வதைக்கு எதிரான அமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டபோது கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற உணவு வகைகள் பல எமது நாட்டிலேயே தயாரிக்கக்கூடியவையாகும். அத்துடன் உள்ளுர் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற அரசு என்ற வகையில் அதற்கு துரித தீர்வு தேட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் கடுமையான சமூக துன்பச் செயலாக மாறியிருக்கின்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றின் அவசியம் எழுந்துள்ளது. சூழல் பாதுகாப்பும் இன்று எமக்கு சவாலாக எழுந்துள்ளது. அத்துடன் எதிர்கால சந்ததியினருக்காக சூழலை பாதுகாப்பதற்கு அரசுக்கு பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அபிவிருத்தியும் சூழல் பாதுகாப்பும் ஒன்றாக பயணிக்கவேண்டிய இரண்டு விடயங்கள் என்பதையும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தில் யானைக் குட்டிகள் களவாடப்பட்டமை தொடர்பாக இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் அதன் தவறாளிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் விசாரனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதன்போது முக்கியமான மூன்று அறிக்கைள் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன. துரித தீர்வுகள் வழங்கப்படவேண்டிய சூழல் பிரச்சினை, உள்ளுர் நன்னீர் மீன் வளங்களை ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட தகவல்களுடன் யானைக்குட்டிகளை வீடுகளில் வளர்த்தல் தொடர்பாகவும் அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

மூன்று தேசிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கான முன்மொழிவுகள் முதலாவது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதிஉள்நாட்டு உணவு உற்பத்தி, சூழல் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மூன்று தேசிய நிகழ்ச்சித்திட்டங்களின் முன்மொழிவுகள் முதலாவது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (ஆகஸ்ட் 20) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான செயலணிகளின் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இச்செயலணிகளுக்கு தலைமைவகிக்கும் பணிப்பாளர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் அவர்களது நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர். நாட்டின் உணவுத்தேவையை தன்னிறைவடையச் செய்யும் நோக்குடனான உள்நாட்டு உணவு உற்பததித்திட்டம் பல்வேறு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டங்கள் விவசாய ஆராய்ச்சி, தரப்படுத்தல் மற்றும் வினைத்திறன்மிக்க விற்பனை முறைமை போன்ற அலகுகளின் கீழ் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ளது. பயிரிடப்படாதிருக்கும் சகல பண்ணை நிலங்களிலும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது தொட்பாக விவசாயிகளை அறிவூட்டுவதன் அவசியத்தை கமநலசேவைகள் சட்டமும் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். சூழல் பிரச்சினைகள், மண் அறிப்பு, காட்டுயானைகளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள். கரையோரப்பாதுகாப்பு போன்ற உபநிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. தான் சுற்றாடல் அமைச்சராக இருந்தபோது சூழலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் பொலித்தீன் பாவனையைக் குறைப்பதற்கு தான் முன்னெடுத்த நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது செயலிழந்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதனை மீண்டும் வலுவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மிகப்பெரும் சமூக பேரழிவாக மாறிவரும் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நடளாவிய ரீதியில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள போதை ஒழிப்பு திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த பொறுப்புக்களை ஒரு அமைச்சு அல்லது நிறுவனத்தினால் மட்டும் நிறைவேற்ற முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் எல்லோருடையவும் பங்குபற்றுகையுடன் அவற்றின் நோக்கங்களை அடைந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு அதிகாரிகள்; தங்களுடைய பொறுப்புக்களையும் பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதிநாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பாவனையை முற்றாக களைந்தொழிவதற்கு அமைச்சுக்களும் நிறுவனங்களும் தங்களுடைய பொறுப்புக்களையும் கடமைகளையும் சரியான முறையிலும் திருப்திகரமான முறையிலும் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். தேசிய ரீதியில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும்போது அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை (31) ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சுக்களும் நிறுவனங்களும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தினை முன்னெடுக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டங்களின் முன்மொழிவுகள் தொடர்பாகவும் செயற்திட்டத்தில் காணப்படும் வளங்களின் பற்றாக்குறைகள் தொடர்பாகவும் விரிவான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மேலும் அதிகாரிகளை இச்சந்தர்ப்பத்தில் பணித்தார். நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக சோதனைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் சட்டச்சிக்கல்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதேவேளை போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும்போது சட்டத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாதிருப்பதாக இச்சந்தர்ப்பத்தின்போது அதிகாரிகளால் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டபோது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய கொள்கையின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தில் ஈடுபடும்போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மற்றும் அதுதொடர்பான பயிற்சிகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குதல் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. அத்தோடு போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அவர்களது பணியினை மேலும் ஆர்வத்துடன் மேற்கொள்வதற்கு அவசியமான திட்டமொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இங்கு கவனம செலுத்தப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயக்கோன், போதைத்தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சமந்த குமார, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோகண திஸாநாயக்க, மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எல்.கே.ஜி குணவர்த்தன, கடற்படைத் தளபதி, மேலதிக பணிப்பாளர் திலக் பெரேரா ஆகியோர் உட்டப பலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.